Tuesday 6 March 2012

உனக்கானவை

என்னால் மட்டுமே முடியும்
என்னும் எண்ணத்தில்தான் எழுகிறேன்
நான் மட்டுமே இருக்க வேண்டும்
என்னும் திமிரில் தான் திரிகிறேன்
உன்னை உயிரினும்
உயிராகச் சீராட்ட‌


எனக்காக உயிர் கொடுப்பாயா என்றாய்
முடியவே முடியாதென்றேன்
நீ நினைக்கிறாயா
அது என் உயிர் ஆசையால் என்று
அல்லவே அல்ல‌
அது உன்னுடனான வாழ்வின்
மீதுள்ள ஏக்கத்தால் மட்டுமே





Monday 10 October 2011

தமிழக உள்ளாட்சித் தேர்தல்:உங்கள் கட்சி வெற்றி பெற‌..

உங்க கட்சி வெற்றி பெறணும்ன்னா நீங்க மொதல்ல ஓட்டுப் போடணும்.தேர்தலுக்குத் தேர்தல் ஓட்டளிப்பதில் உள்ள ஒரு சவாலாக இருப்பது பூத் ஸ்லிப் பெறுவது. கடந்த தேர்தல்களில் எல்லாம் கட்சிக் காரங்க ரொம்ப அக்கறையா கொண்டு வந்து  பூத் ஸ்லிப்பைத் கையில திணிச்சுட்டுப் போவாங்க.ஆனால் முறைகேட்டைத் தடுக்க அரசு ஊழியர்கள் மூலமா பூத் ஸ்லிப் தர ஆரம்பிச்சதுனால அந்த வேலையும் மத்த அரசாங்க வேலைகள் மாதிரியே ஒழுங்கா நடக்கறது இல்ல. கையில இருக்க லிஸ்ட்ல பேரு இருக்கான்னு பொறுமையா தேடறது கூட இல்லை..அரைகுறையா பார்த்துட்டு நாளைக்கு ஆபீஸ்க்கு வாந்தீங்கன்னா பூத் ஸ்லிப் வாங்கிக்கலாம் இல்லைன்னா தேர்தல் அன்னிக்குவாக்குச் சாவடி முன்னாடியே பூத் ஸ்லிப் குடுப்போம்ன்னு எஸ்கேப் ஆகிடறாங்க.. வாக்குச் சாவடியே தெரியாம எங்க போயி பூத் ஸ்லிப் தேடறது? ஊர்ல இருக்க எல்லாவாக்குச் சாவடிக்கும் விசிட் அடிக்க சோம்பல் பட்டுட்டு ஓட்டுப் போடறதையே தவிர்த்துடறோம். இந்த மாதிரி தொல்லைகள்ள இருந்து தப்பிக்கணும்ன்னா
பூத் ஸ்லிப் 
கீழே இருக்க லிங்க கிளிக் பண்ணுங்க.உங்க மாவட்டத்தைத் தேர்ந்தெடுத்து உங்க வாக்காளர் அடையாள அட்டை எண்ணை குடுங்க. பூத் ஸ்லிப் உங்க வாக்குச்சாவடி விவரங்கள் எல்லாம் கிடைக்கும்.

Friday 30 September 2011

டிக்கட் இல்லாமல் பயணம் செய்யணுமா?


ரயில் டிக்கட்களை இணைய தளத்தில் முன்பதிவு செய்பவர்களாக இருந்தால் இனி நீங்கள் டிக்கட் இல்லாமலே பயணம் செய்யலாம்:‍) டிக்கட் பிரிண்ட் அவுட் இவ்வளவு நாட்களாக கட்டாயமானதாக இருந்தது. இனிமேல் உங்கள் டிக்கட்டினை லேப்டாப்,மொபைல் போன் போன்ற மின்ணனு பார்மட்டில் காட்டினால் போதும்.டிக்கட் பிரிண்ட் அவுட் தேவையில்லை.ஆனால் முகவரிச் சான்று எப்போதும் போலக் கட்டாயம்

Saturday 10 September 2011

ஐ நா வையும் கேள்வி கேட்போம்-அறியட்டும் நம்மை

 ஐ நா சபை பொதுச்செயலாளரிடம்  நேரடியாக நம் கேள்விகளையும் எண்ணங்களையும் அறியத் தரும் வாய்ப்பு. தவற வீடாதீர்கள் தமிழர்களே

Time

Tuesday, September 13 · 11:00am - 12:00pm
Location

Facebook, Twitter, Weibo, Livestream and UN Webcast

Created By

UN Webcast

http://www.facebook.com/UNwebcast
More Info

As world leaders prepare to gather in New York for the annual United Nations General Assembly, please join us in a global conversation with the UN Secretary-General, streamed live on Facebook, Twitter, Weibo, Livestream and UN Webcast.

 Ms Juju Chang, television anchor and journalist, will put your questions to Mr. Ban.

Join in to ask the UN Secretary-General anything you like about the United Nations and its w...ork: What more can we do to stop wars from breaking out?

What can one individual do in the fight against climate change ? What’s it like to be Secretary-General of the UN? It’s your chance to get answers straight from the top, on the international issues you care about.

WHERE:

Facebook: http://www.facebook.com/UNwebcast

Twitter: http://www.twitter.com/ using #asktheSG

Weibo: http://www.weibo.com/UN (Chinese)

Livestream: http://www.livestream.com/unitednations

UN Webcast: http://www.un.org/webcast

HOW:

Post your questions on Twitter using #asktheSG in English, French, Arabic, Chinese, Russian, Spanish, Portuguese or Swahili, before or during the live event. Questions in Chinese can also be posted on Weibo: http://www.weibo.com/UN

Watch the event live on Facebook, Weibo, Livestream or UN Webcast.

WHEN:

13 September 2011 at 11:00 a.m. New York Time (EST)

Webpage of the Event in the 6 UN Official languages: http://www.un.org/askthesg/

The archived video of the event will be available on the UN Webcast website with subtitles in the 6 UN Official languages.


நன்றி
http://nanduonorandu.blogspot.com/2011/09/blog-post.html

Wednesday 17 August 2011

அன்னா ஹசாரே‍ - சில கேள்விகள்

ஊழலில்லா நாடு அமைப்பதே வல்லரசாக்குதலின் அடிப்படை என்பது நிதர்சனம்.ஆனால் அந்த ஊழலை ஒழிக்க  இப்போது கையாளப்படும் வழிமுறைகள் உண்மையிலேயே பயனளிக்குமா?

அன்னா ஹசாரே ஒரு சமூக சேவகர். தன் கிராமத்தில் பலச் சீர்திருத்தங்கள் செய்தார்.தகவலறியும் உரிமைச் சட்டம் கொண்டுவந்ததில் அவரது பங்கு மகத்தானது இதெல்லாம் போற்றத்தக்கது தான்.ஆனால் லோக்பால் விஷயத்தில் அவரது அணுகுமுறை சரியானதா?

அன்னா ஹசாரே குழுவின் போராட்டட்த்தில் எனக்கு பதில் தெரியா சில கேள்விகள். தெரிந்தவர்கள் தெரியவைத்தால், என்னைப் போல இருப்பவர்கள் தெளிந்து கொள்வோம்.

தன்னுடைய குழு அமைத்த சட்டத்தைத்தான் பாராளுமன்றம் நிறைவேற்ற வேண்டும் என்றால், பாராளுமன்ற உறுப்பினர்களது உரிமையில் தலையிடும் செயல் அல்லவா அது?

ஜனநாயக நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அவைக்குத் தான் அதிக அதிகாரம் இருக்க வேண்டும் என்பது தானே மரபு.அதை விடுத்து,  நாட்டில் இருக்கும் எவரையும் விசாரிக்கும்,குற்றம் சாட்டும் அதிகாரம் கொண்ட அமைப்பாக லோக்பால் அமைக்கப்பட்டால் அது ஜன நாயக அடிப்படையை அசைத்துப் பார்க்காதா?
இதே போல நாட்டில் மீடியாக்கள் ஆதரவைப் பெற்ற ஒவ்வொருவரும், அவரவர் விருப்பத்திற்கேற்ப உண்ணாவிரதம் ஆர்ப்பாட்டம் என செய்ய ஆரம்பித்தால் பின்னர் ஆட்சியின் நிலை " தடியெடுத்தவன் தண்டல்காரன்" என்பதுதானே?
அரசு அமைத்த லோக்பால் சட்டத்தில் முன்னாள் பிரதமரை விசாரிக்கும் உரிமையும், எக்குற்றமும் நடந்து ஏழு ஆண்டுகள் வரை புகார் அளிக்கலாம் என்னும் வழிமுறையும் உள்ளதே. பிரதமரது ஆட்சிக்காலம் முடிந்தபின் விசாரிக்கலாமே.
ஒரு நாட்டின் பிரதமர் மீது உண்மையாகவோ, பொய்யாகவோ ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டால் அது உலக அரங்கில் நம்பகத்தன்மையை குலைக்கும் செயலாகுமே.எதிர்காலத்தில் வரும் லோக்பால் அமைப்பின் உறுப்பினர்களும் நேர்மையாளர்களாகவே இருப்பார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்.
அரசின் மசோதா முழுமை பெறாத ஒன்றாக அன்னா ஹசாரே குழு கருதினால், இப்போதே போராட்டம் நடத்தி மக்களின் இயல்பு வாழ்வை பாதிக்கச் செய்வதை விட்டு,  இப்பிரச்சினையை தேர்தல் நேரத்தில் மக்களிடையே கொண்டு சென்று,ஆதரவானவர்களை பிரதி நிதிகளாக்கி சட்டத்திருத்தம் கொண்டுவரச் செய்யலாமே?

அதேபோல மத்திய அரசு அன்னா ஹசாரே விஷயத்தில் பயப்படுவது ஏன்?
பல நாட்களாக, ஆளும் அவைகள் ஸ்தம்பிக்கின்றன. அரசு இயந்திரத்தின் முழு கவனமும் இந்த விஷயத்திலேயே இருக்கிறது. திடமான முடிவாக அவரைக் கைது செய்துவிட்டு, பின்னர் வெளியே வாருங்கள் என அவரிடம் கெஞ்சுவது ஏன்?
"எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவமென்பது இழுக்கு"

இது கூடத் தெரியாதவரா தமிழரான உள்துறை அமைச்சர்?

உண்மையிலேயே பயம் இருந்தால் அவரது கோரிக்கையை நிறைவேற்றலாமே?
நான் அடிக்கற மாதிரி அடிக்கிறேன், நீ அழுகுற மாதிரி அழு " என்னும் கண்ணாமூச்சி நாடகம் நடக்கிறதோ? இதற்கெல்லாம் வீணாவது மக்களின் வரிப்பணமும், ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையும் தானே?

அன்னா ஆதரவாளர்களே,
உங்களின் எத்தனை பேர் எதிர் வரும் தேர்தலில் போட்டியிடவோ, அல்லது போட்டியிடும் நேர்மையாளர்களுக்கு ஓட்டுப் போடவோ உங்கள் பணியிடத்தில் விடுமுறை எடுத்துக் கொண்டு செல்லத் தயாராக இருக்கிறீர்கள்? உங்களில் எத்தனை பேர் பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், ரேஷன் கார்டு போன்றவற்றுக்கு  ஒரு பைசா  கையூட்டும் தராதவர்கள்? ஊழலுக்குக் எதிராகக் கொடி பிடித்த கையால் இனி ஒரு காரியத்துக்கு லஞ்சம் தரமாட்டேன் என மனசாட்சியுட‌ம் உறுதி எடுக்க உங்களால் முடியுமா?

தமிழர்களிடம் ஒரு ஸ்பெஷல் கேள்வி.
இதே போன்றதொரு போராட்டத்தை ஈழத்துச் சகோதர உறவுகளுக்காக முன்னெடுத்து உங்களால்  மத்திய அரசை பணிய வைக்க முடியாதா?

.